13 August 2011

18 Minor works


ஒன்பது வாரங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழ் இலக்கியங்களுக்கு வருவோம்.

மூத்தோர்கள் பாடியருள்
பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும்
கேடில் பதினெட்டுக் கீழ்க்கணக்கும்’ ……………. என்பது தமிழ்விடுதூது. முன்புபதினென் மேல்கணக்குநூல்களாகிய பத்துப்பாட்டு மற்றும் எட்டுத்தொகை (10+8=18) ஆகிய நூல்களிலிருந்து ஓரிரு பாடல்களின் சிறப்பினை எடுத்துறைத்தேன். இனி வரும் வாரங்களில்பதினெண் கீழ்கணக்குநூல்களிலிருந்து என்னைக் கவர்ந்த பாடல்களைப் பற்றி எழுதுகிறேன்.

பதினெண் கீழ்கணக்கு நூல்கள் என்னென்ன என்பதைப்பற்றி சிறியதொரு கருத்துவேறுபாடு தமிழறிஞர்களிடமிருந்தது என்னவோ உண்மைதான். இந்த 18 நூல்களும் என்னென்ன என்பதை கீழ்வரும் பாடல் மூலமாக அறிந்து கொள்ளமுடிகிறது:

நாலடி நான்மணி நால்நாற்பது ஐந்திணைமுப்
பால்கடுகம் கோவை பழமொழி - மாமூலம்
இன்னிலைய காஞ்சியுடன் ஏலாதி என்பவே
கைந்நிலைய வாம்கீழ்க் கணக்கு.

இதில் வரும்முப்பால்என்பது திருக்குறளைக் குறிக்கும். ஆக புகழ்பெற்ற திருக்குறளும் பதினென்கீழ்கணக்கு நூல்களில் ஒன்று என்பது இதிலிருந்து தெரிய வருகிறது. இங்குமேல்மற்றும்கீழ்என்ற சொற்களுக்குத்தான் என்ன பொருள்? ‘இவன் மேல் சாதிக்காரன், இவன் கீழ் சாதிக்காரன்என்பதில் உள்ளதைப்போலத்தானோ இவ்விடமும் பொருள்காண வேண்டும்? அதாவது திருக்குறளில் வரும்மேல்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும் கற்றார் அனைத்திலர் பாடு.”  (குறள் 1078) என்பதைப்போல மேல்கணக்கு நூல்கள் யாவும் சிறந்தது என்றும், கீழ்கணக்கு நூல்கள் யாவும் தாழ்ந்தது என்றும் பொருள்காண்பதா? அப்படியென்றால் உலகப்புகழ் பெற்ற திருக்குறள் எப்படி கீழ்கண்ணக்கு நூலானது என்று கேட்களாம். ஆனால், “பாட்டிலுள்ள அடிகளின் மிகுதியும் குறைவுமே மேல், கீழ் என்ற அடைமொழிகளால் விளக்கப்பட்டனஎன நமக்கு ஒருவர் அறிவுரையாற்றுகிறார். அதாவது, மிகுதியான எண்ணிக்கைகளையும், வரிகளையும் கொண்டதனால் பத்துப்பாட்டு மற்றும் எட்டுத்தொகையென்ற சங்க இலக்கியங்கள் யாவையும்பதினென்மெல் கணக்கு (18 major works) என்று வழங்கப்பட்டன. வெறும் 40, 60, 100, 150, 400 என்ணிக்கைகளைக் கொண்ட (திருக்குறளைத் தவிற) சிறிய நூல்களையுடையதனால் இந்த 18 நூல்களையும்பதினென்கீழ் கணக்கு (18 minor works) எனவும் வழங்கலாயிற்று.

All these 18 minor works are of these three types:
1.
நீதி உரைப்பவை (11 நூல்கள்) …… Ethical works
2.
காதலைச் சிறப்பிப்பவை (6 நூல்கள்) …. Akam works (on Love theme)
3.
போர் பற்றியது (1 நூல்) ……Puram works (on War theme)

இந்த 18 நூல்களும் இதோ……
எண்
அகப்பாடல்கள்
எண்
புறப்பாடல்கள் (நீதி)
எண்
புறப்பாடல்கள் (நீதி)
1
கைந்நிலை
7
களவழி நாற்பது
13
ஏலாதி
2
ஐந்திணை ஐம்பது
8
இன்னா நாற்பது
14
ஆசாரக்கோவை
3
ஐந்திணை எழுபது
9
இனியவை நாற்பது
15
முதுமொழிக்காஞ்சி
4
திணைமொழி ஐம்பது
10
திரிகடுகம்
16
பழமொழி நானூறு
5
திணைமாலை நூற்றைம்பது
11
நான்மணிக்கடிகை
17
நாலடியார்
6
கார் நாற்பது
12
சிறுபஞ்சமூலம்
18
திருக்குறள்

இதில் ஏழாவதாக குறிப்பிடப்பட்டுள்ளகளவழி நாற்பதுமட்டும்தான் முற்றிலும் புறத்திணைப் பாடல்களைக் கொண்ட நூல். திருக்குறளை நீதி அல்லது அறநூல் என்று வகைப்படுத்தப் பட்டாலும், இது ஒன்றுதான்அகம், புறம் மற்றும் நீதிமுதலியவற்றை முழுமையாக விவரிக்கிறது என்று கூறலாம்.

All the 18 minor works put together consist of 3,250 verses, with bulk of the verses (1330) coming from the classic of international repute, Tirukkural. 

No
Work
Attributed authorships
Verses
1
Naalatiyaar (Naalati Naanooru)
Jain monks
400
2
Nanmanikkadikai
Vilampi Naakanaar
100
3
Innaa Naarpathu
Kapilar
40
4
Iniyavai Naarpathu
Poothansethanaar
40
5
Kaar Naarpathu
Kannankoothanaar
40
6
Kalavazhi Naarpathu
Poikaiyaar
40
7
Ainthinai Aimpathu
Maaran Poraiyanaar
50
8
Ainthinai Ezhupathu
Moovaathiyaar
70
9
Tinaimozhi Aimpathu
Kannanpthanaar
50
10
Asaarakkovai
Peruvaayin mulliyaar
100
11
Thirikadukam
Nallathanaar
100
12
Pazhamozhi Naanooru
Moonrurai Araiyanaar
400
13
Sirupanchamoolam
Kaariyaasan
100
14
Muthumozhikkaanchi
Mathurai Kootaloor Kizhaar
100
15
Elaathi
Kanimethaviyaar
80
16
Kainnilai / Innilai
Pullankaatanaar
60
17
Thinaimaalai Nootraimpathu
Kanimethaviyaar
150
18
Thirukkural
Thiruvalluvar
1330


TOTAL
3250

Looking at the list above, 10 of the 18 works are named after the number of verses they contain, as forties, fifties, hundreds, four hundreds and so on.  Three of the remaining eight works are named after the number of ethical values emphasized in every poem (3, 4 and 5). We will have a look at these 18 works, one by one, in the coming weeks. One of the specialties of Tamil literature is that it has a diversity of wisdom literatures which appeared at early date when compared wisdom literatures in other Indian languages. Even Sanskrit does not have such a diversity of ethical literatures to boast of.

==========================================================================================
==========================================================================================

1 comment:


  1. شركة نقل اثاث بالدمام التفاؤل شركة نقل اثاث بالخبر كما انها افضل شركة نقل اثاث بالجبيل نقل عفش واثاث بالجبيل والخبر والقطيف والدمام
    شركة نقل اثاث بالدمام
    شركة نقل اثاث بالجبيل
    شركة نقل اثاث بالقطيف

    ReplyDelete