25 September 2011

Kār Nārpathu (நாற்பது)

பதினென்கீழ்கணக்கு நூல்கள் என்னென்ன என்பதை இந்தப் பழைய பாடலொன்றின் வழியாக தெரியவந்துள்ளதென்பதை ஏற்கனவே எழுதியிருந்தேன்.

நாலடி நான்மணி நால்நாற்பது ஐந்திணைமுப்
பால்கடுகம் கோவை பழமொழி - மாமூலம்
இன்னிலைய காஞ்சியுடன் ஏலாதி என்பவே
கைந்நிலைய வாம்கீழ்க் கணக்கு.


இப்பாடலில் வரும் "நால்நாற்பது" என அழைக்கப்படும் "1) கார் நாற்பது, 2) களவழி நாற்பது, 3) இன்னா நாற்பது, 4) இனியவை நாற்பது" என்னும் நான்கு நாற்பதுகளும்தான் நாம் அடுத்தவாரங்களில் ஆராய்ச்சிக்காக எடுத்துக்கொள்ளயிருப்பது. அகத்திணைப் பாடல்களைக்கொண்ட நூல் "கார் நாற்பது" என்றால், புறத்திணைப் பாடல்களைக்கொண்டது "களவழி நாற்பது". இன்னா மற்றும் இனியவை நாற்பது என்பவை அறநூல்கள், அல்லது நீதி இலக்கியங்கள்.

எண்
அகப்பாடல்கள்
எண்
புறப்பாடல்கள் (நீதி)
எண்
புறப்பாடல்கள் (நீதி)
1
கைந்நிலை
7
களவழி நாற்பது
13
ஏலாதி
2
ஐந்திணை ஐம்பது
8
இன்னா நாற்பது
14
ஆசாரக்கோவை
3
ஐந்திணை எழுபது
9
இனியவை நாற்பது
15
முதுமொழிக்காஞ்சி
4
திணைமொழி ஐம்பது
10
திரிகடுகம்
16
பழமொழி நானூறு
5
திணைமாலை நூற்றைம்பது
11
நான்மணிக்கடிகை
17
நாலடியார்
6
கார் நாற்பது
12
சிறுபஞ்சமூலம்
18
திருக்குறள்

மதுரைக் கண்ணங்கூத்தனார் பாடிய இந்த கார்நாற்பதில் முழுவதும் மழைக்காலப் (கார் காலம்) பாடல்கள். எனவே கார்நாற்பதெனப் பெயர்பெற்றது. In all these songs, the heroin longs for the return of hero who, as per ancient Tamil convention, is normally expected to home back at the advent of monsoon. Of the 40 songs in Kaar Naarpathu, I found three poems that compare different species of flowers to certain body parts of animals (a reptile, bird and invertebrate) interesting. These striking comparisons only goes on to show, how close our ancestors and poets were to nature and how meticulous they were in observing the flora and fauna.

Such comparisons of flora and fauna is not restricted to Kaar Naarpathu alone. The Sangam literature abounds with such amazing comparisons, some of which I have already mentioned in my previous emails.

1) Gloria flower and hood of the cobra

அணர்த்து எழு பாம்பின் தலைபோல் புணர் கோடல்
பூங் குலை ஈன்ற புறவு.
(பாடல் 11)

The crowded inflorescence of Gloria flower
Look like the hood of the cobra.


Glory lily (Gloriosa superba) is the common name of a plant that belongs to Liliaceae family. It is a medicinal plant which belongs to the family Liliaceae. The plant is now threatened in India due to over-exploitation as a medicinal plant. Interestingly, this species is the state flower of Tamil Nadu, and also  the national flower of Zimbabwe! தமிழில் இதற்கு நபிக்கொடி என்றும் கலப்பைக் கிழங்கு என்றும் சொல்லுவார்கள் இந்த காலத்தில். சங்க காலத்தில் இதன்பெயர் "காந்தள்". இப்பாடல் மூலம், படமெடுத்தாடும் பாம்புகளைப்போல உள்ளது வெண்காந்தள் மலர்கள் என்கிறார் புலவர் கண்ணங்கூத்தனார். இந்த ஒற்றுமை எவ்வளவு தத்ரூபமானது என்பதை நான் இனைத்துள்ள இரண்டு புகைப்படங்களிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.  What a striking comparison!  

It is in Sangam literature that we find numerous references to this flower, invariably used as a simile, comparing to a faunal element. Since the song I quoted above from Kār Nārpathu mentions Gloriosa flower, we can conclude that this poem belongs to Mountainous Kurinchi landscape (குறிஞ்சித்திணை) of Ainthinai (ஐந்திணை). There is an interesting parallel from Akanānūru, but this song is from Mullai thinai. And the name used to refer Gloriosa is not ‘kāntal’ but ‘kōtal’. And the word used for snake is not 'pāmbu' but 'aravu'.
 
வெம்சின அரவின் பை அணந்தன்ன
தண்கமழ் கோடல் தாது பிணி அவிழத்
(Akanānūru, 154)
The fragrant and cool kodal buds unpetal,
Spreading their pollen in the air
And look like the raised hoods of wrathful serpents;

Another Sangam work Kurunthogai (185) says the same: "பாம்பு பை அவிந்தது போலக் கூம்பி" இருக்கும் "ஒண் செங்காந்தள்" (Gloria blooms like the multi-lined shrunken cobra's hood). In another 18-minor work Tinaimozhi Aimpathu, the poet says that the thunderbolt mistakes the charming kāntal flower buds for snakes (காந்தள்கடி கவின, பாம்பு என ஓடி). The petals of Gloriosa (also called the Malabar lily) is also often compared by Tamil poets to ladies' fingers (see Porunaratruppatai, 33-34; Paripātal, 9:76). The practice of comparing this flower to fingers is not restricted to the Tamils but others as well. Natarajah (2001) informs us that the flower is called Fou Shou in Chinese which means "Buddha's hand". In Puranānūru (90), the blooming petals of this flower are compared to broken bangles; in Natrinai (247), its red-tipped buds are compared to blood-tainted tusks of war elephants; and in Kurunthogai (361), the flower is compared to the cherry red combs of a rooster.

2) Jasmine buds and beak of birds
சிரல்வாய் வனப்பின ஆகி, நிரல் ஒப்ப
ஈர்ந் தண் தளவம் தகைந்தன;
  (பாடல் 36)

The array of golden jasmine buds
Resemble the beauty of kingfishers beak.

 
இங்கு "சிரல்" என்றால் Kingfisher, "தளவம்" என்றால் Jasmine. பாடலாசிரியர் இங்கு ஒரு பறவையின் அலகை மல்லிகையின் மொட்டுக்கு ஒப்பிடுகிறார். இது எந்த அளவிற்கு சரியானதென்பதைப் பார்ப்போம். சாதாரன மீன்கொத்திப்பறவையின் அலகு கருப்பாகவோ அல்லது சிவப்பாகவோ மற்றும் நீளமாகவும் இருக்குமே, அதெப்படி மல்லிகைப் பூவின்மொட்டுகளைப் போல இருக்குமென்று எண்ணினேன்? உரையாசிரியர் ஒருவர் இதை "செம் முல்லைப் பூக்கள் குருவியின்வாய் போல் அழகுடைய தாயிற்று" என்று விளக்கமளிக்கிறார். பல மீன்கொத்திப் பறவைகளின் புகைப்படங்களை வைத்து ஒப்பிட்டுப் பார்த்தேன். மல்லிகை மொட்டு குருவியின் குறுகிய அலகிற்கு ஒப்பிடுவதே சரியானது என்று தோன்றியது. "சிரல்" என்று பாடலாசிரியர் எழுதினாலும், நீளமில்லா அலகைக்கொண்ட குருவியைப்போன்ற ஒரு பறவையினத்தைத்தான் அவர் மனதில் கருதியிருக்க வேண்டும். But still the buds have some resemblance to certain species of collared kingfishers. Many other Tamil literary works refer to the kingfisher (சிரல்) (examples: Akam, 106; Patiru, 42; Ainkuru, 447; Nalati, 395) and one of the striking references is the comparison of blood-taint beaks of the crows to the red beaks of kingfishers (Kalavazhi Naarpathu, 5). The species of kingfisher referred here has to be the white-throated one.

Since the song mentions Jasmine flower, I conclude that this belongs to Mullai landscape (ஐந்திணைகளில் ஒன்றான முல்லைத்திணை).

3) Nochi buds and eyes of the crab

அலவன் கண் ஏய்ப்ப அரும்பு ஈன்று அவிழ்ந்த
கருங் குரல் நொச்சிப் பசுந் தழை சூடி
. (பாடல் 39)

The cluster of dark flowers of nochi
Have bloomed after budding, like the eye of the crab

நொச்சி மரத்தின் botanical name "Vitex negundo" (though there are many species of Vitex; மேற்குத் தொடர்ச்சிமலையில் காணப்படும் V. altissima is another example). இங்கு "அலவன்" என்றால் நண்டு. கடற்கரை நண்டின் கண்கள் நொச்சிப்பூவின் மொட்டுகளைப்போல இருக்கிறதாம். அதெப்படி என்று கேட்கலாம். We can appreciate the beauty of this comparison only when we compare photographs. What a striking resemblance! Pale violent in colour, jutting out on a stalk or peduncle.....!!! Wow.....! Brilliant comparison! Like Gloriosa, Vitex (nochi) was also commonly used by Sangam poets. In Kurunthogai (138), poet Kollan Azhisi compares the leaflets of nochi to peacock's foot. Since the song mentions a crab, I think the song belongs to the Littoral landscape (ஐந்திணைகளில் ஒன்றான நெய்தல்திணை).

References:

Nadarajah, D. 2001. The Gloriosa superba in classical poetry. In: The Collected Papers on Classical Tamil Literature in the Journal of Tamil Culture. Compiled by D. Sivaganesh. New Century Book House (P) Ltd., Chennai. pp 217-228

==========================================================================================
==========================================================================================

04 September 2011

Ainthinai ezhupathu

Introduction: Literary classics abound in all languages of the word and it is indeed a pleasure to read them and appreciate how our ancestors viewed life and how every civilization differed from each other in viewing at the aims and pursuits of life in this world. The objective here is to present once a week, the best poem or sloka or verse or song I have read among the different literary works of the world. "யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்" என்று திருமூலர் திருமந்திரத்தில் கூறியதுபோல, let everyone attain the bliss I have received in reading them.


இவ்வாரம் நான் எடுத்துக்கொள்வது கீழேயுள்ள பட்டியலில் மூன்றாவதாக வரும் அகம் பற்றிய பாடல்களை அடங்கிய "ஐந்தினை எழுபது" என்ற நூல். மூவாதியார் என்பவரால் தொகுக்கப்பட்ட இந்நூலில் 70 பாடல்கள் உள்ளன. அவைகளில் இரண்டு பாடல்கள் (25 மற்றும் 26-ஆம் பாடல்கள்) முற்றிலுமாக நமக்குக் கிடைக்கவில்லை. எந்த ஒரு பிரதியிலும் இந்த 2 பாடல்களும் இல்லை.
 
எண்
அகப்பாடல்கள்
எண்
புறப்பாடல்கள் (நீதி)
எண்
புறப்பாடல்கள் (நீதி)
1
கைந்நிலை
7
களவழி நாற்பது
13
ஏலாதி
2
ஐந்திணை ஐம்பது
8
இன்னா நாற்பது
14
ஆசாரக்கோவை
3
ஐந்திணை எழுபது
9
இனியவை நாற்பது
15
முதுமொழிக்காஞ்சி
4
திணைமொழி ஐம்பது
10
திரிகடுகம்
16
பழமொழி நானூறு
5
திணைமாலை நூற்றைம்பது
11
நான்மணிக்கடிகை
17
நாலடியார்
6
கார் நாற்பது
12
சிறுபஞ்சமூலம்
18
திருக்குறள்
 
இதிலுள்ள எல்லா பாடல்களும் மற்ற முதல் ஆறு நூல்களைப்போல நாலடிகளைக் கொண்டது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்து திணைகளை மையமாகக்கொண்டு இயற்றப்பட்டவை. குறிப்பாக எந்த ஒரு பாடலும் என்னைக் கவர்ந்ததாகக் கூற இயலாவிடினும், இந்நூலில் 34-ஆவதாக வரும் "பாலை"த் திணைப் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு நிகழ்ச்சியை என்னுடைய சொந்த அனுபவத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியுடன் ஒப்பிட்டு இங்கு ஆராய விரும்புகிறேன்.

அந்த 34-ஆவது பாடல் இதோ:

பீர் இவர் கூரை மறுமனைச் சேர்ந்து அல்கி,
கூர் உகிர் எண்கின் இருங்கிளை கண்படுக்கும் .....

Meaning:
Crowds of sharp-clawed bears gather and sleep in the ruined homes
On whose roofs spread the sponge-gourd creepers.


இங்கு "பீர்" என்றால் என்ன? அட நாம் அருந்தும் "Beer" இல்லையப்பா, "Beer" இல்லை. பீர்க்கங்காயைத்தான் இங்கு "பீர்" சுருக்கமாக சொல்லப்பட்டுள்ளது; மொழிபெயர்ப்பாளர் தக்ஷினாமூர்த்தியும் தன்னுடைய ஆங்கில மொழிபெயர்ப்பில் இதை "sponge-gourd" என்று குறிப்பிடுகிறார். The Tamil word for bear used here is “எண்குand not “கரடி” - the word Tamilians are familiar with. 
 
Let us now come to the main point. Do bears live in crowds or groups? No. They are generally solitary and the only groups you see are those of the mother and grown up cubs. The cubs live with the mother till about 18 months by which time they become independent. Cubs that are close to two years of age might weight up to 25 kgs, and two or three cubs of such size with the mother could be mistaken for a group!


மனை மடையானது எப்படி?

அனால், கரடிகள் மடையில்தானே தஞ்சம் புகும். Do they inhabit abandoned houses, you may ask? Yes they do, as I have personally experienced during one of my rescue missions in the state of Chhattisgarh. About five years ago (precisely on the 31st of December 2006), I was called to a place called Koria, a village far away from the busy town of Bilaspur in Chhattisgarh, as part of Wildlife Trust of India's Sloth Bear Conservation and Welfare Project. I was informed that a bear and its cub are living inside an abandoned house in the midst of a village, not very far away from the forest. When I reached there a couple of days after this incident (probably on the second of January 2007), my field officer Meetu Gupta showed me some photos of what happened during their attempt to capture the mother bear (so that they can then translocate the bear to a far away wildlife sanctuary away from human habitations).

I have attached five of those photos here.
இனி, படம் காட்டிப்பொருள் விளக்கம் தருகிறேன்.

கரடியை பிடிப்பது எப்படி?
படம் 1. மறுமனை. The uninhabited house
படம் 2. இருங்கிளை. Trap set for the bear.
படம் 1. மறுமனை: No one has been staying in this house for more than a year. Its inhabitants moved to a new house which was built the previous year, only about 50 meters away from this old house.

படம் 3. Trapped bear
படம் 4. Being taken to the truck(All photos by Meetu Gupta)
படம் 5. The great escape
படம் 2. இருங்கிளை: The bear used to go to the nearby forest every now and then (obviously for feeding) all along the nearby stream where people used to bathe, wash etc. கரடி வீட்டில் இல்லாத நேரம் பார்த்து வீட்டின் உள்ளே சென்றுபார்த்தபொழுது ஒரு குட்டியிருப்பதைக் கண்டனர். A bear is perhaps the most dangerous and unpredictable of all wild mammals, and the last animal you would like to encounter in a forest. A bear with cubs is double dangerous, and a bear robbed of her cubs is still more dangerous. That is why we see this interesting moral in the Bible:

Better meet a fool in its folly than a
Bear robbed of her cubs.

(Proverbs, 17:12)

படம் 3. கூரை: வெளியே வர தயங்கிய கரடியை, வீட்டின் ஓட்டைப் பிரித்து ஒரு தோட்டியின் மூலமாக கிளப்பிவிட்டனர். பீதியுடன் ஓடிய கரடி, கூட்டில் மாட்டியது.
படம் 4. கரடியை கூட்டோடு தூக்கி லாரியில் ஏற்ற முற்சி.
படம் 5. அடுத்த காட்சி இதோ....! வளைக்கப்பட்ட கம்பிகள்; கூட்டில் கரடியில்லை! அடிமைப்பெண் படத்தில் எம்-ஜி.ஆர் கம்பியை வளைத்து சிறயிலிருந்து தப்பியது போல, கரடியும் கம்பிகளை வளைத்து, ஓடிவிட்டது. கரடி கம்பிகளை வளைக்கும் காட்சியோ, கூட்டிலிருந்து வெளிவரும் காட்சியோ, அல்லது, அது ஓடிப்போகும் காட்சியோ நமக்குக்கிடைக்கவில்லை. ஏன்? கரடி மிரள, கம்பிகள் வளைய அருகிலிருந்த எல்லாவரும் துண்டைக்காணோம் துணியைக்காணோம் என்று ஓடிவிட்டனர். புகைப்படமெடுக்க அங்கு யாருமில்லை. எல்லாமொரு நிமிடத்தில் முடிவடைந்தது.

கரடியை காப்பாற்றியது எப்படி?

When I reached the spot, in the best interest of the bear and people living there, I advised the Forest Department staff to cordon off the abandoned house with a barbed wire fence so that children do not venture there. With great difficulty I convinced them that capturing and translcating the animals would amount to their displacement from their home range. A disturbed bear would soon take her cub once it is strong enough to cling on to the mother.
ஏனென்றால்குட்டிகளை மிக எளிதாக முதுகிலேற்றிச்செல்லும் பழக்கம் கரடிகளிடம் உள்ளது. ஓரிரு மாதங்களில் தன் குட்டிகளை முதுகிலேற்றி வீட்டைக்காலி செய்துவிடும் என்று சொன்னேன்.

They also followed my advice. "Rescue" means not necessarily capturing the animal, but freeing from danger and evil plight. In this case, we facilitated the release of the animal on its own from the clutches of anxious villagers. It was one of the rare instances of human-wildlife coexistence.

=========================================================================
=========================================================================