13 February 2011

Kalithogai (கலித்தொகை)

Introduction: Literary classics abound in all languages of the word and it is indeed a pleasure to read them and appreciate how our ancestors viewed life and how every civilization differed from each other in viewing at the aims and pursuits of life in this world. The objective here is to present once a week, the best poem or sloka or verse or song I have read among the different literary works of the world. "யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்" என்று திருமூலர் திருமந்திரத்தில் கூறியதுபோல, let everyone attain the bliss I have received in reading them.

"கலித்தொகை" என்றால் கலிப்பா என்னும் வகையில் உள்ள தொகைப்பாடல்கள் நூல் என்று பொருள். 150 பாடல்களே மட்டுமுள்ள இதிலுள்ள பாடல்கள் அத்துனையும் ஐந்து திணைப்படி (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை) வகுக்கப்பட்டுள்ளன. ஆனால், ஒவ்வொரு பாடல்களும் சராசரி இருபது வரிகளைக்கொண்டதுகடந்தவாரம் கண்ட ஐந்குறுநூரைப்போல இவ்வைந்து திணைப்படல்களையும் திணைக்கு ஒரு புலவர் வீதம் ஐந்து புலவர்கள் பாடியதாக குறிப்பிடப்பட்டுள்ளது (Names: Nallanthuvanaar, Kapilar, Ilanaakanaar, Nallurithiran & Perunkadungo). However, modern scholarship is of the strong view that all the 150 songs were sung by one poet!! Another fact about Kalithogai is that the entire work is of a later date. இதைஎப்படி கணிக்கிறார்கள் என்று எல்லோரும் நினைக்கலாம். Very simple. Just look at the language and use of words. You will be able to understand the meaning better than the anthologies we have seen so far.  

அடுத்துநான் கண்ட சங்க இலக்கியங்களிலே கலித்தொகையைப்போல வேறு ஒரு நூலும் திருக்குறளுக்கு இணையாக கண்டதில்லை. அதாவது, சொல்லடைவில் மட்டுமல்ல, we see many interesting parallels in ideas between Thirukkural and Kalithogai. Just one example here: 

ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றது என்னெஞ்சு.     
(Kural 1284)

ஊடுவென் என்பேன்மன் அந்நிலையே அவர்காணின்
கூடுவென் என்னுமிக் கொள்கையில் நெஞ்சே.
(Kalithogai, 67:12-12) 

சரி விஷயத்துக்கு வருவோம்.  கலித்தொகையில் எனக்கு பிடித்த பாடல்களில் மூன்றை இங்கு எடுத்துறைக்க விரும்புகிறேன். 

(1) Elopement is also virtue

திருமணத்திற்கு முன்பு நடப்பவைகளைகளவியல்என்றும், கணவன்மனைவியிடையே நடக்கும் நிகழ்ச்சிகளை கற்பியல்என்றும் நம் முன்னோர் எடுத்துறைகின்றனர். “களவியல்பாடல்களைப்பார்க்கும்போது, ஒன்றுமட்டும் நமக்கு தெள்ளத்தெளிவாக அறியமுடிகின்றது. அதாவது, சங்க காலங்களில் (300 B.C. to 400 A.D.), திருமணத்திற்கு முன்பு ஆனும் பெண்ணும் இரகசியமாக சந்திப்பதும், உடலுரவில் ஈடுபடுதும், வீட்டைவிட்டு ஓடிப்போவதும் சகஜமாக நிகழ்ச்சிகள் என்பது. ஆறாம் நூற்றாண்டிற்குப் பிறகே, இதெல்லாம் தவறான செயல்கள் என்று ஒரு மாறுபட்ட சமுதாயதிற்கு தமிழர்களை தள்ளப்பட்டதற்குக் காரணம், சைவ மற்றும் வைனவ பக்தி எழுச்சி. Interestingly the present society is going back to those old values of sexual freedom, so much so that even actresses like Kushbu are openly coming out in support of premarital relationships. Poor Kushbu, obviously did not know much about the life during Sangam Age, for she could have easily defended her position by pointing fingers at the prevalence of a free mingling society of men and women during the Sangam period. In fact a girl eloping with the man of choice was considered dhārmic during Sangam days. Kushbu could have cited this poem from Kalithogai (9):

பல உறு நறும் சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை,
மலை உளே பிறப்பினும், மலைக்கு அவை தாம் என் செய்யும்?
நினையும்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!
சீர்கெழு வெண் முத்தம் அணிபவர்க்கு அல்லதை,
நீர் உளே பிறப்பினும், நீர்க்கு அவை தாம் என் செய்யும்?
தேரும்கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!
(Perunkatunkōn, Kalithogai, 9)

The multi-fragrant sandal benefits those who use it,
                        Though born in the mountains, what benefit it confers on the mountains?
The peerless pearl benefits those who adorn themselves with it,
                        Though born of the ocean, what benefit it confers it on the ocean?
The music that comes from the seven strings, rejoices those who play on them,
                        Though born of the lute, what benefit it confers on the lute?

If you ponder, even such is your daughter unto you.
Therefore grieve not for her sake, to her true love she is constant.
She has preferred the company of a goodly, noble youth.
Verily, I say unto you, that this is indeed the path of Dharma.
 [Translators: First 4 lines – Xavier S. Thani Nayagam; the last 4: P.N. Appusamy]

Tamil’s ancient grammarian Tholkappiyar reinfornces this point that elopment of the heroin with the hero is also a kind of marriage: கொடுப்போர் இன்றியும் காரணம் உண்டே, புணர்ந்து உடன்போகிய காலையான” (Tholkappiyam, Porul, Karpiyal, 1087).

(2) Ethical poem

அடுத்த பாடலான 133-ஆவது பாடலை இயற்றியவர் நல்லந்துவனார். Any work that shows a lot of similarity to the Kural would necessarily have many verses of wisdom and ethics. For an akam work of love poems, Kalithogai abounds with ethical teachings. This song from Nallanthuvanār is easily the best of all such poems in Kalithogai:

'ஆற்றுதல்' என்பது, ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்;
'
போற்றுதல்' என்பது, புணர்ந்தாரை பிரியாமை;
'
பண்பு' எனப்படுவது, பாடு அறிந்து ஒழுகுதல்;
'
அன்பு' எனப்படுவது, தன் கிளை செறாஅமை;
'
அறிவு' எனப்படுவது, பேதையார் சொல் நோன்றல்;
'
செறிவு' எனப்படுவது, கூறியது மறாஅமை;
'
நிறை' எனப்படுவது, மறை பிறர் அறியாமை;
'
முறை' எனப்படுவது, கண்ணோடாது உயிர் வௌவல்;
'
பொறை' எனப்படுவது, போற்றாரை பொறுத்தல்.

Goodness is helping one in distress;
Support is not deserting one who is dependent;
Culture is to act in unison with the ways of the world;
Love is not surrendering ties with one’s kin;
Wisdom is to ignore the advice of the ignorant;
Honesty is not to go back on one’s words;
Integrity is to ignore others’ faults;
Justice is awarding punishment without partiality;
Patience is to suffer the ill-disposed.

(Kalithogai 133)

This is a fantastic song! The ethical values emphasized in this poem are of great quality. என்ன, இந்த பாடலை தமிழில் படிப்பதற்கு எளிதாக தோன்றுகிறதா? குறிப்பாக நாம் இதுவரைக்கண்ட மற்ற சங்க இலக்கியங்களைவிட comparatively மிக எளிதாகத் தெரியுமே? இதனால்தான் கலித்தொகை காலத்தில் பிற்பட்டது என்று கூறுகிறார்கள் (500 or 600 A.D.).

(3) The charitable are like fruiting trees

Xavier Thani Nāyagam (2011), commenting on poem 10 in Kalithogai, writes in his essay on the ethical interpretation of nature poetry in Sangam literature: “Trees of pālai (desert) region are said to be devoid of fruits and leaves like a young man whose youth has passed a lonely existence. Like the pretty minded man whose wealth does not benefit those who approach it, and like the end of him that lives a life of wrong doing which ends in self destruction, the tree dries up even to its very roots”. That is to say that the uncharitable are like fruitless trees providing nothing to people. Even Jesus is said to have cursed a barren fig tree which ultimately withered away from the roots (Mark 11:12-14; 20-21). But not all fruits are edible. Some are palatable only for animals and not fit for human consumption. There are also fruits left untouched by humans as well as animals. Some of them are even poisonous. Tamil sage Valluvar wrote that the wealth of the unloved is like a poisonous tree that ripens in the heart of a village (Kural 1008). 


On the contrary, a philanthropist should bestow his wealth like a shower of rain (Natrinai 265; Nitisātakam 71; Kural 1010), like an unfailing medicine tree (Kural 217) and a tree coming to fruit (Kural 216).  There are at least three poems in Kalithogai that compare a philanthropist to a fruiting or flowering tree.  

தீது இலான் செல்வம் போல், தீம் கரை மரம் நந்தப்,
பேதுறு மட மொழிப், பிணை எழில் மான் நோக்கின்,
The trees on the river banks
            grew like the wealth of him that gives without stint,
And lives a virtuous life doing no-evil to others.
(Kali 27: 1-2)

உணர்ந்தவர் ஈகை போல் இணர் ஊழ்த்த மரத்தொடும்,
The trees were heavy with flowers
            like the bounty of him
            who realizes the transitoriness of life.
(Kali 32: 11)

மடி இலான் செல்வம் போல் மரன் நந்த, அச் செல்வம்
படி உண்பார் நுகர்ச்சி போல் பல் சினை மிஞிறு ஆர்ப்ப,
Like the wealth of the bountiful man, the trees bloomed;
Like the effortless case of those who enjoy the wealth of such a man,
The bees sported among the flowers.
(Kali 35:1-2)


Reference:

Xavier Thani Nayagam, 2011. The ethical interpretation of nature in ancient Tamil poetry. In: The Collected Papers on Classical Tamil Literature in the Journal of Tamil Culture. Complied by D. Sivaganesh. New Century Book House (P) Ltd.  Pp 20-31

===================================================================
===================================================================

No comments:

Post a Comment