Introduction: Literary classics abound in all languages of the word and it is indeed a pleasure to read them and appreciate how our ancestors viewed life and how every civilization differed from each other in viewing at the aims and pursuits of life in this world. The objective here is to present once a week, the best poem or sloka or verse or song I have read among the different literary works of the world. "யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்" என்று திருமூலர் திருமந்திரத்தில் கூறியதுபோல, let everyone attain the bliss I have received in reading them.
The first work I have taken up for discussion is Kainnilai, one of the six works in Pathinenkeelkanakku (18 minor works) which contain only akam or love poems.
எண் | அகப்பாடல்கள் | எண் | புறப்பாடல்கள் (நீதி) | எண் | புறப்பாடல்கள் (நீதி) |
1 | கைந்நிலை | 7 | களவழி நாற்பது | 13 | ஏலாதி |
2 | ஐந்திணை ஐம்பது | 8 | இன்னா நாற்பது | 14 | ஆசாரக்கோவை |
3 | ஐந்திணை எழுபது | 9 | இனியவை நாற்பது | 15 | முதுமொழிக்காஞ்சி |
4 | திணைமொழி ஐம்பது | 10 | திரிகடுகம் | 16 | பழமொழி நானூறு |
5 | திணைமாலை நூற்றைம்பது | 11 | நான்மணிக்கடிகை | 17 | நாலடியார் |
6 | கார் நாற்பது | 12 | சிறுபஞ்சமூலம் | 18 | திருக்குறள் |
இப்பட்டியலில் காணப்படும் முதல் 6 நூல்களும் “அகம்” (Love) பற்றிய பாடல்களைக் கொண்டவை. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை என்ற ஐந்திணையைச் சார்ந்த பாடல்கள் இந்நூல்களில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. இனி நான் முன்பு குறிப்பிட்ட 18-ஆன் நூற்றண்டினைச் சார்ந்த வெண்பாவை மீண்டுமொருமுறைப் பார்ப்போம்……..
நாலடி நான்மணி நால்நாற்பது ஐந்திணைமுப்
பால்கடுகம் கோவை பழமொழி - மாமூலம்
இன்னிலைய காஞ்சியுடன் ஏலாதி என்பவே
கைந்நிலைய வாம்கீழ்க் கணக்கு.
பால்கடுகம் கோவை பழமொழி - மாமூலம்
இன்னிலைய காஞ்சியுடன் ஏலாதி என்பவே
கைந்நிலைய வாம்கீழ்க் கணக்கு.
பதினெண் கீழ்கணக்கு நூல்கள் என்னென்ன என்பதை விளக்கும் இப்பாடலில் கடைசியாக குறிப்பிடப்பட்டுள்ள “கைந்நிலை” என்ற நூலைத்தான் நான் முதன்முதலாக எடுத்துக்கொள்கிறேன். ஆனால், இந்த வெண்பாவில் குறிப்பிடப்பட்டுள்ள சொற்களைப் பிரித்துப் பார்தால், நாலடியார் (1) நான்மணிக்கடிகை (1) நால்வகை நாற்பதுகள் (4) ஐந்திணை (4) முப்பால் (1) திரிகடுகம் (1) ஆசாரக்கோவை (1) பழமொழி நானூறு (1) சிறுபஞ்சமூலம் (1) இன்னிலை (1) முதுமொழிக்காஞ்சி (1) ஏலாதி (1) கைந்நிலை (1) என்று மொத்தம் 18 என்று அல்லாமல் 19 என்று எண்ணிக்கையாகிறது! Where did this extra ONE work come from? அதுதான் “இந்நிலை” என்ற நூல். மூன்றாவது வரி "இன்னிலை" ஒரு நூலாகக் காட்டுகின்றது, நான்காவது வரி "கைந்நிலை" ஒரு நூலாகக் காட்டுகின்றது. We learn more about this controversy at Tamil Virtual Library:
“இன்னிலையை நூலாகக் கொண்டால் கைந்நிலை மறைந்து "ஒழுக்க நிலையனவாம்" கீழ்க்கணக்கு என அடை மொழியாகின்றது. கைந்நிலையை நூலாகக் கொண்டால் இன்னிலை மறைந்து "இனிய நிலைமையாகிய காஞ்சி என அடை மொழியாகின்றது. பதினெட்டாவது நூல் இன்னிலையா? கைந்நிலையா? என்ற ஐயம் எவர்க்கும் தோன்றுகின்றது. "இன்னிலை" உள்ளது என்று பலர் கூறினர். கைந்நிலை உள்ளது ஒன்று பலர் கூறினர். ஏட்டிலுள்ளது என முன்னர்க் கூறியவர்கட்கு எடுத்துக் காட்டுபவர் போல "இன்னிலை" என்ற நூலை திரு. வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் அச்சிற் பதித்தனர். "கைந்நிலை" என்ற நூலை ஆசிரியர் திரு. அனந்தராமையர் அவர்கள் பதித்தனர். அவற்றின் வரலாறு சிறிது காண்க.”
இந்நிலையில், இந்த ‘இன்னிலை’ Vs ‘கைந்நிலை’ வாதவிவாதத்தை சற்று தள்ளி வைத்துவிட்டு, கைந்நிலையப்பற்றி இவ்வாரம் எடுத்துக்கொண்டு, இன்னிலையைப் பிறகு கவணிப்போம். ஏறத்தாழ 9-ஆம் நூற்றாண்டில் தோன்றியதாகக் கருதப்படும் இந்நூல் புல்லங்காடனார் என்பவரால் இயற்றப்பட்டதென்பர். “கை” என்றால் ஒழுக்கம் என்றும் பொருளுள்ளதால், ஐந்திணை ஒழுக்கத்தைப் பற்றிக் கூறுவதால் இதற்கு ‘கந்நிலை’ என்று பெயர்வந்ததென்பர். வெறும் 60 பாடல்களே கொண்ட இந்நூலில், 18 பாடல்கள் சிதைந்தவாறே நமக்குக்கிடைத்துள்ளன. மொத்தமுள்ள அறுபதில், ஒவ்வொரு ஐந்திணையின் தலைப்பில் 12 பாடல்கள் விகிதம் இடம்பெற்றுள்ளன (அதாவது 12 x 5 = 60). சிதைந்து காணப்படும் 18 பாடல்களில் பலவற்றில் வெறும் ஓரிரண்டு வரிகள் மட்டுமே உள்ளன.
எனக்குப் பிடித்த பாடலும் சிதைந்துகாணப்படும் இந்த 18 பாடல்களின் ஒன்றுதான். Fortunately only couple of words have gone missing from this poem. சங்க இலக்கியங்கள் பலவற்றில் சில நேரம் யானையும் வேங்கை மரத்தின் பூக்களைக்கண்டு, அதைப்புலியென நினைத்து பயந்து ஓடியதாகக் காண்கிறோம் (உதாரணம். அகநானூறு 228). ஆனால் இந்தப்பாடலில் ஒரு காட்டுச் சேவல் பயப்படுவதைக் காண்கிறோம்.குருதி மலர்த்தோன்றி கூர்முகை ஈன
........... சேவல் எனப் பிடவாம் ஏறி
பொருதீ எனவெருளும் பொன்நேர் நிறத்தாய்
அரிதவர் வாரா விடல்.
........... சேவல் எனப் பிடவாம் ஏறி
பொருதீ எனவெருளும் பொன்நேர் நிறத்தாய்
அரிதவர் வாரா விடல்.
(கைந்நிலை 26)
O my god-hued friend! It is very rare that our lover fails to return here,
Travelling through the forest, where the blood-red kantal’s sharp bud unfolds,
Causing a wild jungle fowl to mistake it for a rival that comes to fight it,
And to climb a pitavam plant and to observe it keenly,
And then gets scared again mistaking it for hot fire.
[Translator: A. Dakshinamurthy]
The jungle fowl has obviously mistaken the red petals of the Gloria superba flowers for the combs of another jungle fowl. It then gets on top of the pitavam plant only to get scared again seeing the same flowers but in a bunch this time resembling fire. Pitavam plant is said to be Randia malabarica (Krishnamurthy, 2007). A more realistic comparison of the comb would with the flowers of murukku or kavir tree (முருக்கு or கவிர் - Erythrina stricta or E. suberosa) as it appears in other literary works of Sangam age. இதைப்போலவே குறிஞ்சித்திணயில் ஒரு பாடலில், ஒரு யானை எப்படி காந்தள் மலரை தீயென நினைத்து ஓடுவதாக சித்தரிக்கிறார் புலவர் புல்லங்காடனார்.
காந்தள ரும்புகை என்று கதவேழம்
ஏந்தல் மருப்பிடைக் கைவைத்து இனனோக்கிப்
பாய்ந்தெழுந்து ஓடும் பயமலை நன்னாடன்
காய்ந்தான்கொல் நம்கண் கலப்பு? (கைந்நிலை 9)
ஏந்தல் மருப்பிடைக் கைவைத்து இனனோக்கிப்
பாய்ந்தெழுந்து ஓடும் பயமலை நன்னாடன்
காய்ந்தான்கொல் நம்கண் கலப்பு? (கைந்நிலை 9)
He is the lord of a goodly and useful mountain
Where a wrathful elephant mistakes the kaantal flowers for fire
And runs scared towards its kind, lifting up its trunk between its tusks.
[Translator: A. Dakshinamurthy]
[Translator: A. Dakshinamurthy]
இது, நாய் தன் வாலைக் கால்களிடையே சுருட்டிக்கொன்று ஓடுவதுபோன்று. Kāndal is the old name of kalappaik kizhanku plant which also happens to the state flower of Tamil Nadu.
=========================================================================
I Home I Claims & Criticisms I Purpose of this site I What is new here? I Forthcoming topics I
I Comparative Religion I Gospel of Vivekananda I
I Kural in 30 languages I Mathematical mircale in Kural I Introduction to the Kural I Kural and Worldly Wisdom I
I Comparative Religion I Gospel of Vivekananda I
I Kural in 30 languages I Mathematical mircale in Kural I Introduction to the Kural I Kural and Worldly Wisdom I
=========================================================================
No comments:
Post a Comment