04 September 2011

Ainthinai ezhupathu

Introduction: Literary classics abound in all languages of the word and it is indeed a pleasure to read them and appreciate how our ancestors viewed life and how every civilization differed from each other in viewing at the aims and pursuits of life in this world. The objective here is to present once a week, the best poem or sloka or verse or song I have read among the different literary works of the world. "யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்" என்று திருமூலர் திருமந்திரத்தில் கூறியதுபோல, let everyone attain the bliss I have received in reading them.


இவ்வாரம் நான் எடுத்துக்கொள்வது கீழேயுள்ள பட்டியலில் மூன்றாவதாக வரும் அகம் பற்றிய பாடல்களை அடங்கிய "ஐந்தினை எழுபது" என்ற நூல். மூவாதியார் என்பவரால் தொகுக்கப்பட்ட இந்நூலில் 70 பாடல்கள் உள்ளன. அவைகளில் இரண்டு பாடல்கள் (25 மற்றும் 26-ஆம் பாடல்கள்) முற்றிலுமாக நமக்குக் கிடைக்கவில்லை. எந்த ஒரு பிரதியிலும் இந்த 2 பாடல்களும் இல்லை.
 
எண்
அகப்பாடல்கள்
எண்
புறப்பாடல்கள் (நீதி)
எண்
புறப்பாடல்கள் (நீதி)
1
கைந்நிலை
7
களவழி நாற்பது
13
ஏலாதி
2
ஐந்திணை ஐம்பது
8
இன்னா நாற்பது
14
ஆசாரக்கோவை
3
ஐந்திணை எழுபது
9
இனியவை நாற்பது
15
முதுமொழிக்காஞ்சி
4
திணைமொழி ஐம்பது
10
திரிகடுகம்
16
பழமொழி நானூறு
5
திணைமாலை நூற்றைம்பது
11
நான்மணிக்கடிகை
17
நாலடியார்
6
கார் நாற்பது
12
சிறுபஞ்சமூலம்
18
திருக்குறள்
 
இதிலுள்ள எல்லா பாடல்களும் மற்ற முதல் ஆறு நூல்களைப்போல நாலடிகளைக் கொண்டது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்து திணைகளை மையமாகக்கொண்டு இயற்றப்பட்டவை. குறிப்பாக எந்த ஒரு பாடலும் என்னைக் கவர்ந்ததாகக் கூற இயலாவிடினும், இந்நூலில் 34-ஆவதாக வரும் "பாலை"த் திணைப் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு நிகழ்ச்சியை என்னுடைய சொந்த அனுபவத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியுடன் ஒப்பிட்டு இங்கு ஆராய விரும்புகிறேன்.

அந்த 34-ஆவது பாடல் இதோ:

பீர் இவர் கூரை மறுமனைச் சேர்ந்து அல்கி,
கூர் உகிர் எண்கின் இருங்கிளை கண்படுக்கும் .....

Meaning:
Crowds of sharp-clawed bears gather and sleep in the ruined homes
On whose roofs spread the sponge-gourd creepers.


இங்கு "பீர்" என்றால் என்ன? அட நாம் அருந்தும் "Beer" இல்லையப்பா, "Beer" இல்லை. பீர்க்கங்காயைத்தான் இங்கு "பீர்" சுருக்கமாக சொல்லப்பட்டுள்ளது; மொழிபெயர்ப்பாளர் தக்ஷினாமூர்த்தியும் தன்னுடைய ஆங்கில மொழிபெயர்ப்பில் இதை "sponge-gourd" என்று குறிப்பிடுகிறார். The Tamil word for bear used here is “எண்குand not “கரடி” - the word Tamilians are familiar with. 
 
Let us now come to the main point. Do bears live in crowds or groups? No. They are generally solitary and the only groups you see are those of the mother and grown up cubs. The cubs live with the mother till about 18 months by which time they become independent. Cubs that are close to two years of age might weight up to 25 kgs, and two or three cubs of such size with the mother could be mistaken for a group!


மனை மடையானது எப்படி?

அனால், கரடிகள் மடையில்தானே தஞ்சம் புகும். Do they inhabit abandoned houses, you may ask? Yes they do, as I have personally experienced during one of my rescue missions in the state of Chhattisgarh. About five years ago (precisely on the 31st of December 2006), I was called to a place called Koria, a village far away from the busy town of Bilaspur in Chhattisgarh, as part of Wildlife Trust of India's Sloth Bear Conservation and Welfare Project. I was informed that a bear and its cub are living inside an abandoned house in the midst of a village, not very far away from the forest. When I reached there a couple of days after this incident (probably on the second of January 2007), my field officer Meetu Gupta showed me some photos of what happened during their attempt to capture the mother bear (so that they can then translocate the bear to a far away wildlife sanctuary away from human habitations).

I have attached five of those photos here.
இனி, படம் காட்டிப்பொருள் விளக்கம் தருகிறேன்.

கரடியை பிடிப்பது எப்படி?
படம் 1. மறுமனை. The uninhabited house
படம் 2. இருங்கிளை. Trap set for the bear.
படம் 1. மறுமனை: No one has been staying in this house for more than a year. Its inhabitants moved to a new house which was built the previous year, only about 50 meters away from this old house.

படம் 3. Trapped bear
படம் 4. Being taken to the truck(All photos by Meetu Gupta)
படம் 5. The great escape
படம் 2. இருங்கிளை: The bear used to go to the nearby forest every now and then (obviously for feeding) all along the nearby stream where people used to bathe, wash etc. கரடி வீட்டில் இல்லாத நேரம் பார்த்து வீட்டின் உள்ளே சென்றுபார்த்தபொழுது ஒரு குட்டியிருப்பதைக் கண்டனர். A bear is perhaps the most dangerous and unpredictable of all wild mammals, and the last animal you would like to encounter in a forest. A bear with cubs is double dangerous, and a bear robbed of her cubs is still more dangerous. That is why we see this interesting moral in the Bible:

Better meet a fool in its folly than a
Bear robbed of her cubs.

(Proverbs, 17:12)

படம் 3. கூரை: வெளியே வர தயங்கிய கரடியை, வீட்டின் ஓட்டைப் பிரித்து ஒரு தோட்டியின் மூலமாக கிளப்பிவிட்டனர். பீதியுடன் ஓடிய கரடி, கூட்டில் மாட்டியது.
படம் 4. கரடியை கூட்டோடு தூக்கி லாரியில் ஏற்ற முற்சி.
படம் 5. அடுத்த காட்சி இதோ....! வளைக்கப்பட்ட கம்பிகள்; கூட்டில் கரடியில்லை! அடிமைப்பெண் படத்தில் எம்-ஜி.ஆர் கம்பியை வளைத்து சிறயிலிருந்து தப்பியது போல, கரடியும் கம்பிகளை வளைத்து, ஓடிவிட்டது. கரடி கம்பிகளை வளைக்கும் காட்சியோ, கூட்டிலிருந்து வெளிவரும் காட்சியோ, அல்லது, அது ஓடிப்போகும் காட்சியோ நமக்குக்கிடைக்கவில்லை. ஏன்? கரடி மிரள, கம்பிகள் வளைய அருகிலிருந்த எல்லாவரும் துண்டைக்காணோம் துணியைக்காணோம் என்று ஓடிவிட்டனர். புகைப்படமெடுக்க அங்கு யாருமில்லை. எல்லாமொரு நிமிடத்தில் முடிவடைந்தது.

கரடியை காப்பாற்றியது எப்படி?

When I reached the spot, in the best interest of the bear and people living there, I advised the Forest Department staff to cordon off the abandoned house with a barbed wire fence so that children do not venture there. With great difficulty I convinced them that capturing and translcating the animals would amount to their displacement from their home range. A disturbed bear would soon take her cub once it is strong enough to cling on to the mother.
ஏனென்றால்குட்டிகளை மிக எளிதாக முதுகிலேற்றிச்செல்லும் பழக்கம் கரடிகளிடம் உள்ளது. ஓரிரு மாதங்களில் தன் குட்டிகளை முதுகிலேற்றி வீட்டைக்காலி செய்துவிடும் என்று சொன்னேன்.

They also followed my advice. "Rescue" means not necessarily capturing the animal, but freeing from danger and evil plight. In this case, we facilitated the release of the animal on its own from the clutches of anxious villagers. It was one of the rare instances of human-wildlife coexistence.

=========================================================================
=========================================================================


1 comment:


  1. شركة تنظيف خزانات بالمدينة المنورة وشقق بالمدينة المنورة شركة غسيل خزانات ومكافحة حشرات بالمدينة المنورة ونقل عفش بالمدينة المنورة مؤسسة صفوة المدينة
    شركة تنظيف خزانات بالمدينة المنورة
    شركة مكافحة حشرات بالمدينة المنورة مؤسسة صفوة المدينة انها الاولى فى مكافحة ورش الحشرات بالمدينة المنورة رش البق رش الصراصير مكافحة النمل الابيض بالمدينة المنورة
    شركة مكافحة حشرات بالمدينة المنورة

    ReplyDelete